ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடி குண்டர் சட்டத்தில் கைதான மாணவி வளர்மதி பல்கலைக்கழகத்திலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
கதிராமங்கலம், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக துண்டுபிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த மாணவி வளர்மதி , நக்சலைட்டுகளுக்கு ஆள் சேர்க்கும் புகாரில் கைது செய்யப்பட்டு அவர் மீது, குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
சேலம் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீது, குண்டர் சட்டம் போடப்பட்டதையடுத்து அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மாணவி வளர்மதியை சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. கைதாகி சிறையில் உள்ள மாணவி வளர்மதி தற்போது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இதழியல் படிப்பு படித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.