Home இலங்கைஇளஞ்செழியன் பயணம்செய்த வேளை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை ஜனாதிபதி உத்தரவு

இளஞ்செழியன் பயணம்செய்த வேளை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை ஜனாதிபதி உத்தரவு

by admin


யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் பயணம்செய்த வேளை நேற்று (22) நல்லூர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கண்டித்துள்ள ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன   அந்த சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி சரத் பிரேமசந்திரவின் மறைவுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வை அடுத்து நீதிபதியின் பாதுகாப்பு குறித்து கவனம்செலுத்தியுள்ள ஜனாதிபதி, அனைத்து நீதிபதிகளினதும் பாதுகாப்பு தொடர்பில் விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

விசேட பொலிஸ் குழுக்களை அமைத்து இந்த நிகழ்வு தொடர்பாக விரிவான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More