குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய ஆபிரிக்காவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் அமைதி காக்கும் படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் பணியாற்றிய ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
மொரக்கோவைச் சேர்ந்த ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படை உறுப்பினர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். மத்திய ஆபிரிக்காவின் தென் பகுதி இரத்தினக்கல் அகழ்வு நகரான பான்காசோ ( Bangassou )வில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றள்ளது.
கிறிஸ்தவ தீவிரவாத இயக்கமொன்றே இந்தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மதக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் இதுவரை 115 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது