குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டியது அவசியமானது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ ( Justin Trudeau )தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பான நினைவு தினத்தை முன்னிட்டு அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
1983ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் திகதி முதல் 29ம் திகதி வரையில் ஏற்பட்ட கலவரத்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்களின் உயிர்கள் காவு கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை என குறிப்பிட்டுள்ள அவர் எனினும், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதலின் ஊடாகவே நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடாவின் கலாச்சார பல்வகைமையே நாட்டின் மிகப் பெரிய பலமாக காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.