172
நல்லூர் துப்பாக்கித் தாக்குதலைக் கண்டித்து நாளை( செவ்வாய் கிழமை) கிளிநொச்சி சந்தையை பூட்டி எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்த தாக்குதலை கண்டித்தும், தாக்குதல் சம்பவத்தி்ன போது உயிரிழ்ந்து நீதிபதியின் மெய்பாதுகாப்பாளருக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையிலும் சந்தையை பூட்டி எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
கிளிநொச்சி சேவை சந்தையின் அளைனத்து வியாபார நிலையங்களும் நாளைய தினம் பூட்டப்பட்டு இவ் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தக சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
இதேவேளை இன்றைய தினம் கிளிநொச்சியிலும் சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளை பகிஸ்கரித்துள்ளனா். அத்தோடு தனியாா் போக்குபரத்துச் சேவைகளும் இடம்பெறவில்லை என்பது குறிபிடத்தக்கது
Spread the love