குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
பிரித்தானியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
பிரெக்சிற்றின் பின்னர் வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. பிரித்தானிய வர்த்தக அமைச்சர் லியாம் பொக்ஸ்(liam fox ) இரண்டு நாள் பயணமொன்றை மேற்கொண்டு அமெரிக்கா பயணம் செய்ய உள்ளார்.
இந்தநிலையில் அமெரிக்க வர்த்தக செயலாளர் Robert Lighthizer உடன், லியாம் பொக்ஸ் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியதன் பின்னரான வர்த்தக மற்றும் பொருளாதார ஏற்பாடுகளில் பிரித்தானியா தீவிரம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.