குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பேர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியசின் இலத்திரனியல் சாதனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் இந்த சாதனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அலோசியசின் மடிக்கணனி, மடிக்கணணி , செல்லிடப்பேசி உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பிலான விசாரணைகளுக்காக இந்த சாதனங்கள் தேவைப்படுவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர், ஆணைக்குழுவிடம் தெரிவித்திருந்த நிலையில் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஆணைக்குழு சாதனங்களை ஒப்படைக்குமாறு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது
சர்ச்சைக்குரிய பிணை முறி கொடுக்கல் வாங்கல்களுக்காக பயன்படுத்திய கணனி, செல்லிடப்பேசி என்பனவற்றை விசாரணைக்கு உட்படுத்துமாறு உத்தரவு
Jul 24, 2017 @ 08:09
பெர்பெச்சுவல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அர்ஜூன் அலோசியஸின் கணனி, மடிக்கணனி, செல்லிடப்பேசி உள்ளிட்ட உபகரணங்களை விசாரணைக்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய பிணை முறி கொடுக்கல் வாங்கல்களுக்காக பயன்படுத்திய இலத்திரனியல் சாதனங்கள் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளது.
பிணை முறி மோசடி குறித்து விசாரணை நடத்தும் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் இன்றைய தினம் முன்னிலையாகியிருந்த குற்றப் புலானய்வுப் பிரிவு அதிகாரிகள், இலத்திரனியல் சாதனங்களை விசாரணைக்காக பெற்றுத் தருமாறு கோரியிருந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆணைக்குழு, மடிக்கணனி, செல்லிடப்பேசி, மடிக்கணணி; உள்ளிட்ட சாதனங்களை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.