இலங்கை

வடக்கில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது – மனோ கணேசன்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடக்கில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அண்மையில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதன் மூலம் வடக்கில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளமை அம்பலமாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கான பொறுப்பினை காவல்துறை மா அதிபரும் உயர் காவல்துறை அதிகாரிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். குற்றச் செயலுடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply