முப்படை அணிவகுப்புடன் டெல்லியில் நடைபெற்ற கோலாகல விழாவில் இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் இன்று பதவி ஏற்றுள்ளார்.
அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின் அவர் அதற்கான கோப்பில் கையொப்பமிட்டார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற ராம்நாத் கோவிந்த் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றுகையில் ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி வழியில் தனது பணி தொடரும் எனத் தெரிவித்தார்.
இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்கிறார்:-
Jul 25, 2017 @ 03:50
இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்கிறார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைந்தநிலையில் கடந்த 17 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமாரைவிட அதிக வாக்குகள் பெற்று ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற்றார்.
இதையடுத்து நாட்டின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்கிறார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நண்பகல் 12.15 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது இந்த விழாவில் அனைத்து மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.