குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி பளை பகுதியில் வைத்து பல இலட்சங்கள் பெறுமதியான மரக்குற்றிகள் காவல்துறையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மல்லாவி பகுதியில் இருந்து எருவுக்குள் மறைக்கப்பட்ட நிலையில் பாரவூர்த்தி ஒன்றில் யாழ்ப்பாணம் நோக்கி கடத்திச் செல்லப்பட்ட நிலையில் கிளிநொச்சி முல்லைத்தீவுக்கான விசேட பிரதி காவல்துறைமா அதிபரின் குற்றத்தடுப்பு பிரிவினா் இவற்றை கைப்பற்றியுள்ளனா்.
காவல்துறையினருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்து பளை இத்தாவில் பகுதியில் ஏ9 பிரதான வீதியில் வைத்து குறித்த பாராவூர்த்தியை சோதனையிட்ட போதே முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தற்போது மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கோண்டு வருகின்றனா்.