குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் பயன்படுத்திய தொடர்பாடல் சாதனங்களை ஒப்படைக்குமாறு பிணை முறி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
2015ம் ஆண்டில் பயன்படுத்திய சகல தொடர்பாடல் சாதனங்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு அர்ஜூன் மகேந்திரனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அர்ஜூன் மகேந்திரன் பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான உட்சந்தை தகவல்களை கசிய விட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அர்ஜூன் மகேந்திரனின் மருமகனான பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அர்ஜூன் அலோசியஸின் தொடர்பாடல் சாதனங்களையும் ஒப்படைக்குமாறு ஆணைக்குழு பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.