195
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் பராமரிப்பிற்காக மாதாந்தம் அரசாங்கம் 200 மில்லியன் ரூபா செலவிட உள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் மாதாந்தம் இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. மேலும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 50 மில்லியன் ரூபா மாதாந்தம் வழங்கப்பட உள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் நிர்வாக சபை தலைவராக வைத்தியர் அஜித் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
Spread the love