குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலகின் முதனிலை டென்னிஸ் வீரர்களில் ஒருவரான நோவக் ஜோகோவிக் (Novak Djokovic) உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
12 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் டென்னிஸ் பட்டங்களை வென்றுள்ள நோவக் இந்த ஆண்டில் இனி எந்தவொரு போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்று முடிந்த விம்பிள்டன் கிண்ண டென்னிஸ் போட்டித் தொடரின் காலிறுதிச் சுற்றின் போது நோவக்கிற்கு முழங்கையில் உபாதை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முழங் கை உபாதையினால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
சேர்பியாவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிக் உலக டென்னிஸ் தர வரிசையில் நான்காம் இடத்தை வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பல ஆண்டுகளுக்கு தொழில்சார் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பதற்கு தாம் உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் போதியளவு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றே தம்மை சோதனையிட்ட அனைத்து மருத்துவர்களும் ஆலோசனை வழங்கியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 2018ம் ஆண்டு பருவ காலத்தில் நோவக் ஜோகோவிக் மீளவும் போட்டிகளில் பங்கேற்பார் என அவரது பயிற்றுவிப்பாளர் அன்ட்ரே அகாஸீ தெரிவித்துள்ளார்.