170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மூன்று அமைச்சரவை பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.
இறுதியாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. விசும்பாயவை தனது உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்த அனுமதி தருமாறு ரவி கருணாநாயக்க ஓர் அமைச்சரவை பத்திரத்தில் கோரியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சருக்காக பிரதம அதிகாரியொருவரை நியமித்தல் தொடர்பிலும் ஓர் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவைகளே ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love