குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
மகளிர் விவகார மற்றும் சிறுவர்கள் உரிமைகள் தொடர்பான ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனே தன்னைக் காப்பாற்றியதாக புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமார் இன்றையதினம் சாட்சியமளித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் நேற்று திங்கட்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் ) முறைமையில் நடைபெற்ற நிலையில் இன்றையதினத்துக்கு ஒத்திவைக்க்பபட்டது.
இந்தநிலையில் இன்று இடம்பெற்ற சாட்சிய பதிவின் போதுதே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்றுறை காவல்துறையினர் தகது சகோதரனை கைதுசெய்தமை தொடர்பாக முறையிடுவதற்காக யாழ்ப்பாணம் சென்றபோதே வேலணையைச் சேர்ந்த மக்கள் தன்னைப் பிடித்து மரத்தில் கட்டிவைத்து அடித்ததாகவும் இதன்போது ; விஜயகலா மகேஸ்வரனே தன்னை காப்பாற்றி தனது குடும்பத்திடம் ஒப்படைத்தார் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தகது கட்டை அவிழ்ந்து விடுமாறு மக்களிடம் கோரிய விஜயகலா தனது குடும்பத்தினர் வரும்வரை சுமார் 2மணித்தியாலங்கள் அங்கேயே காத்திருந்ததாகவும் சுவிஸ்குமார் சாட்சியமளித்துள்ளார்
ராஜாங்க அமைச்சர் விஜயகலாவிடம் புங்குடுதீவு மாணவி கொலை குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது:-
Jul 27, 2017 @ 04:45
மகளிர் விவகார மற்றும் சிறுவர்கள் உரிமைகள் தொடர்பான ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம், புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
குறித்த கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமார், சம்பவம் இடம்பெற்ற போது ஊர் மக்களினால் சுற்றி வளைத்து மின் கம்பம் ஒன்றில் கட்டியிருந்ததாகவும் அவரை பொலிஸாரிடம் ஒப்படைக்காது விடுவித்தமை தொடர்பில் விஜயகலா மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் விஜயகலாவிடம் வாக்கு மூலமொன்றை பதிவு செய்து கொள்ளுமாறு ஊர்காவற்துறை நீதவான் அப்துல் மஜிட் மொகமட் றியாழ், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டு தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதிக் காவல்துறை மா அதிபர் லலித் ஜயசிங்கவின் சட்டத்தரணிகள், நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவில்லை என பிரதிக் காவல்துறை மா அதிபரின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான வீடியோ சாட்சியங்களையும் சட்டத்தரணிகள் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துமாறும், விஜயகலாவிடம் வாக்கு மூலமொன்றை பதிவு செய்து கொள்ளுமாறும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.