குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதிபதிக்கு ஆதரவு கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறிதத் போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்றது, குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்க்பபட்டவர்களின் உறவுகள் பல்வேறு சுலோக அட்டைகளை ஏந்தியவாறு அமைதி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த மக்கள்,
மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தமிழ் மகன் ஒருவரை ஏவி விட்டு மேற்கொள்ளப்பட்டதாகவும் குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் விலியுறுத்தியிருந்தனர்.
இதே வேளை குறித்த போராட்டத்தில் பங்கு கொண்ட அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான அமைப்பின் தலைவர் வண பிதா சக்திவேல் அவர்கள் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் நீண்ட காலமாக இருப்பதற்கு எமது தமிழ் அரசியல் தலைமைகளே காரணம் என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.
ஐரோப்பிய ஒன்றியம் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கியமை தொடர்பில் பதிலளித்த அவர், இலங்கை அரசு குறித்த விடயத்தில் திருப்தியடையாத போதிலும், விடுதலைப்புலிகளின் தடை நீக்கமானது தமிழ் மக்களின் அரசியல் உரிமையை ஏற்றுக்கொண்டுள்ளமையை உணர்த்துவதாக குறிப்பிட்டிருந்தார்.