Home இலங்கையாழில்.பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்

யாழில்.பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழில்.பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது இனம் தெரியாதநபர்கள் தாக்குதலினை மேற்கொண்டு உள்ளார்கள்.  யாழ்.கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிங்கராஜா (வயது 28) என்பவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது

குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் நெல்லியடியில் உள்ள தனது வீட்டுக்கு விடுமுறையில் சென்று விட்டு மீண்டும் தனது கடமையை பொறுப்பேற்க கொடிகாமம் பொலிஸ் நிலையம் நோக்கி மோட்டார் சைக்கிளில்இ  சென்று கொண்டிருந்த போது வரணி பகுதியில் இனம் தெரியாத நபர்கள் வழிமறித்து தாக்குதல்களை மேற்கொண்டனர்.

அதன் போது தனது மோட்டார் சைக்கிளை கைவிட்டு தாக்குதலாளிகளிடம் இருந்து பொலிஸ் உத்தியோகஸ்தர் தப்பியோடியுள்ளதுடன் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கும் தகவல் வழங்கியுள்ளார்.

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு நெல்லியடி பொலிசார் விரைந்துள்ள போதிலும் தாக்குதலாளிகள் தப்பித்து சென்றுள்ளனர்.

அதையடுத்து நெல்லியடி போலீசார் காயத்திற்கு உள்ளான பொலிஸ் உத்தியோகஸ்தரை மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நெல்லியடி மற்றும் கொடிகாம போலீசார் தீவிர விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More