குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரிட்டனின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல் குழுக்களை ஸ்கொட்லான்ட் யார்ட் பொலிஸார் வேவுபார்த்த விடயம் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
போலி அடையாளங்களுடன் ஊருடுவிய ஸ்கொட்லான்ட் யார்ட் காவல்துறையினர் பல அரசியல் குழுக்கள் குறித்த விபரங்களை சேகரித்துள்ளனர்
தற்போதைய பிரதமர் உள்துறை அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் நியமித்த விசாரணைக்குழுவின் விசாரணைகள் மூலமே இந்த விடயம் அம்பலமாகியுள்ளது.கடந்த நான்கு தசாப்த காலப்பகுதியில் அரசியல் குழுக்கள் வேவு பார்க்கப்பட்டமை குறித்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது இதுவே முதற்தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்கொட்லான்ட் யார்ட் ஊருடுவிய அமைப்புகளின் பெயர்பட்டியல்கள் வெளியாகாத போதிலும் சூழல் பாதுகாப்பு அமைப்புகள்,இனவெறிக்கு எதிரான அமைப்புகள் இடதுசாரி அமைப்புகள் தீவிரவாத வலதுசாரி அமைப்புகள் போன்றவற்றை அதிகாரிகள் இலக்கு வைத்திருக்கலாம் என்ற ஊகங்கள் வெளியாகியுள்ளன.
1968 முதல் அரசியல் குழுக்களை வேவு பார்ப்பதற்காக 144 உளவாளிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
உளவாளிகள் போலியான அடையாளங்களை உருவாக்கிக்கொண்டனர் அரசாங்கம் வழங்கிய போலி ஆவணங்களை பயன்படுத்தினர் எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.