உலகம்

வடகொரியாவின் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைக்கு ஐ.நா கண்டனம்


வடகொரியா ஜப்பான் கடல் பகுதியில் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை சோதனை நடத்தியமைக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்ரனியோ குட்டாரஸ் ( Antonio Guterres)     கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் ஜப்பான் கடல் பகுதியில்   கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை சோதனையை வடகொரியா நிகழ்த்தியுள்ளதாக ஜப்பான் அரசு குற்றம் சுமத்தியிருந்தது.

அதனை    ஒப்புக்கொண்டுள்ள வடகொரியா   இந்த ஏவுகணை அதிக தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது எனவும் இந்த ஏவுகணை மூலம் அமெரிக்காவின் முக்கிய நகரங்களை எளிதாக தாக்கமுடியும் எனவும் தெரிவித்திருந்தது.

வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அடுத்து அமெரிக்கா மற்றும் தென்கொரியா ராணுவத்தினர் கூட்டாக ஏவுகணை சோதனைகளை நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வடகொரியாவின் இந்த நடவடிக்கைக் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்ரனியோ குட்டாரஸ்  கண்டனம் தெரிவித்துள்ளாரர் என  அவரது ; செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் இந்த செயல் கொரியா கடல் பகுதியில் மேலும் பரபரப்பான சூழலுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply