குளோபல் தமிழ்ச் செய்தியாளர்-
தேர்தல் நடத்தப்படாவிட்டால் மாகாணசபையின் அதிகாரங்கள் ஆளுனரிடம் ஒப்படைக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படாத மாகாணசபைகள் ஆளுனரின் கீழ் நிர்வாகம் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபையின் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் மாகாணசபையை நிர்வாகம் செய்ய உதவுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணசபைகளின் உத்தியோகபூர்வ பதவிக் காலங்கள் பூர்த்தியாகின்றன. எனினும் இந்த மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் அடுத்த வருடம் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.