விளையாட்டு

கருத்தரித்திருந்த நிலையிலேயே விம்பிள்டன் சக்கரநாற்காலி மகளிர் போட்டியில் வெற்றியீட்டினேன் – வைலி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கருத்தரித்திருந்த நிலையிலேயே விம்பிள்டன் சக்கர நாற்காலி மகளிர் போட்டியில் வெற்றியீட்டியதாக பிரித்தானியாவின் ஜோர்டேன் வைலி (  Jordanne Whiley ) தெரிவித்துள்ளார்.

சக்கர நாற்காலி இரட்டையர் போட்டியில் அவர் இவ்வாறு வெற்றியீட்டியிருந்தார். 11 வாரங்கள் கருத்தரித்திருந்த நிலையில் தாம் போட்டியில் வெற்றியீட்டியதாகத் தெரிவித்துள்ளார்.

25 வயதான  வைலி  டுவிட்டர் பதவு ஒன்றின் மூலம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜப்பானில் நடைபெறவுள்ள பரா ஒலிம்பிக் போட்டித் தொடரில் பங்கேற்பதற்கு சாத்தியம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 8 வாரங்கள் கருவுற்றிருந்த நிலையில் செரீனா வில்லியம்ஸ் அவுஸ்திரேலிய ஓபன் போட்டித் தொடரில் சம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply