234
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபருக்கு அவரது மனைவி ரெஸ்ரர் (மின்சாரம் பரிசோதிக்கும் கருவி ) ஒன்றினை பொதிக்குள் வைத்து கொடுக்க முயன்ற வேளை சிறைசாலை காவலர்களால் அது கைப்பற்றப்பட்டு உள்ளது.
யாழ்.சிறைச்சாலையில் தனி சிறைகூடத்திலேயே சந்தேகநபர் தனி நபராக தடுத்து வைக்கப்பட்டு உள்ளார். அந்நிலையில் சந்தேகநபரின் மனைவி சிறையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளவருக்கு உடைகளை வழங்க பொதி செய்து சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களிடம் கையளித்துள்ளார்.
அந்த பொதியினை சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் சோதனையிட்ட போது, அதனுள் இருந்து ரெஸ்ரர் (மின்சாரம் பரிசோதிக்கும் கருவி ) ஒன்று மீட்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மனைவியை கடுமையாக எச்சரித்த சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் , கணவனை பார்க்க சிறைக்கு வருவதற்கும் தடை விதித்துள்ளனர்.
பின்னணி.
நல்லூர் பின் வீதியில் கடந்த 22ஆம் திகதி மாலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய் பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்து இருந்ததுடன் , மற்றுமொரு மெய் பாதுகாவலர் காயமடைந்திருந்தார்.
அந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான சிவராசா ஜெயந்தன் கடந்த 25ஆம் திகதி யாழ்.பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். அதனை அடுத்து குறித்த நபரை யாழ்.நீதவான் முன்னிலையில் போலீசார் முற்படுத்திய போது சந்தேக நபரை எதிர்வரும் 8ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு இட்டு இருந்தார்.
Spread the love