வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து கண்டறிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (30) கெபிதிகொல்லேவை பிரதேசத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி செயலக ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தகைய முன் அறிவித்தலுமின்றி திடீரென சென்ற ஜனாதிபதியிடம் மக்கள் வரட்சியான காலநிலை காரணமாக தாம் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கியதுடன், தமது முதன்மையான கோரிக்கையாக குடிநீர் மற்றும் தண்ணீர் தேவையை நிறைவேற்றித் தரவேண்டும் எனக் கோரினர்.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகளை தொடர்புகொண்ட ஜனாதிபதி, அம் மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றிக்கொடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் அதற்குத் தேவையான ஏற்பாடுகளை குறைவின்றி வழங்கமாறும் பணிப்புரை விடுத்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது