குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யூரோ கிண்ண மகளிர் கால்பந்தாட்ட சம்பியன் பட்டம் வெல்லும் ஜெர்மனியின் கனவை, டென்மார்க் அணி தகர்த்தெறிந்துள்ளது. ஜெர்மன் மகளிர் அணி இதுவரையில் தொடர்ச்சியாக ஆறு தடவைகள் ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்ட சம்பியன் பட்டத்தை வென்றுள்ள நிலையில் இம்முறையும் சம்பியன் பட்டம் வென்றெடுக்கும் கனவுடன் காலிறுதிச் சுற்றில், டென்மார்க் அணியை எதிர்த்தாடியது.
எனினும் துரதிஸ்டவசமாக இந்தப் போட்டியில் இரண்டுக்கு ஒன்று என்ற கோல் வித்தியாசத்தில் டென்மார்க் அணி, ஜெர்மனியை வீழ்த்தி வெற்றியீட்டியுள்ளது.
போட்டி ஆரம்பித்து மூன்றாம் நிமிடத்திலேயே ஜெர்மன் வீராங்கனை Kerschowski ஒரு கோலை அடித்தார். எனினும், போட்டியின் 49ம் நிமிடத்தில் டெர்ன்மார்க்கின் வீராங்கனை Nadim வும் போட்டியின் 83ம் நிமிடத்தில் டென்மார்க்கின் வீராங்கனை Nielsen கோல்களைப் போட்டு ஜெர்மனியின் கனவை தகர்த்தனர்.
26 ஆண்டு கால யூரோ கிண்ண சம்பியன்ஸிப் போட்டித் தொடரில் இதுவரையில் ஜெர்மன் மகளிர் அணி மூன்று தடவைகள் மட்டுமே தோல்வியைத் தழுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.