Home இலங்கை15 வருடங்களின் பின்னர் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இலங்கை

15 வருடங்களின் பின்னர் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இலங்கை

by admin

 

நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 க்கு 0 எனும் கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.  காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற  நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 154 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி  5 விக்கெட்களை இழந்து 602 ஓட்டங்களை பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்தியது. இதனையடுத்து  துடுப்பெடு்தாடிய நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 88 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.  இதனையடுத்து , இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்காக நியூஸிலாந்து மீண்டும் களமிறங்கிய போதிலும் அனைத்து விக்கெட்களையும் இழந்து 360 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இந்த வெற்றியின் ஊடாக 02 போட்டிகள் கொண்ட தொடரை 2 க்கு 0 என இலங்கை அணி கைப்பற்றியது.  அத்துடன் நியூஸிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி 15 வருடங்களின் பின்னர் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More