இலங்கை

பொலன்னறுவை ரோயல் கல்லூரியின் புதிய மூன்று மாடிக்கட்டிடம் மாணவர்களிடம் கையளிப்பு :

பொலன்னறுவை ரோயல் ஆரம்பக் கல்லூரியின் புதிய மூன்று மாடிக் கட்டிடம் மற்றும் நடன மண்டபம் நேற்றையதினம்  ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

ரஜரட்ட நவோதய – எழுச்சிபெறும் பொலன்னறுவை மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பாடசாலை அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து வசதிகளுடனும் நிர்மாணிக்கப்பட்டுள்ள இம்மண்டபத்திற்கு 50 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.

கல்லூரியில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply