குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீனா சமாதானத்தை விரும்புகின்றது என சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் தெரிவித்துள்ளார். எனினும், எந்தவொரு காரணத்திற்காகவும் இறைமையை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீன மக்கள் இராணுவம் ஆரம்பிக்கப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவடைவதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சீன மக்கள் சமாதானத்தை நேசிப்பவர்கள் எனவும், வன்முறைகளை விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனிவும் சீனாவை பிளவடையச் செய்ய எந்தவொரு நபருக்கும், அரசியல் கட்சிக்கும், நாட்டுக்கும், நிறுவனத்திற்கும், அமைப்பிற்கும் இடமளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய ஒருமைப்பாடு, தேசியப் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தேவைகளுக்கு முரணான வகையிலான எந்தவொரு காரியத்தையும் செய்ய வேண்டுமென எந்தவொரு தரப்பும் எதிர்பார்க்க கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.