153
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பண்டாரநாயக்க விமான நிலையத்தில், 49 வயதான அப்துல் வஹிட் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கண்டி தெல்தெனிய பகுதியைச் சேர்ந்த இவர், திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சவூதியில் தொழில் புரிந்து வரும் குறித்த நபர் தனது மனைவியை அழைத்துச் செல்வதற்காக வந்த போது இவ்வாறு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
Spread the love