டோக்லாமில் படைகளை உடனே திரும்பப்பெற உறுதியான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என இந்தியாவுக்கு, சீனா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா, பூடான், சீனா நாடுகளின் முச்சந்திப்பில் சிக்கிம் எல்லையில் டோக்லாம் பகுதியில் வீதி அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டமைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த பகுதியில் இந்தியா அமைத்திருந்த 2 பதுங்கு குழிகளை சீன ராணுவம் அகற்றியது.
இதையடுத்து, டோக்லாமில் ராணுவத்தை இந்தியா குவித்துள்ளநிலையில் தனது எல்லையில் இந்திய ராணுவம் ஆக்கிரமித்து இருப்பதாக கூறி சீனாவும் அப்பகுதியில் படைகளை குவித்துள்ளதனாவ் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது.
இந்த நிலையில் கடந்த வாரம் பிரிக்ஸ் கூட்டத்தின் போது இந்தியாவின் சார்பில் அஜித் தோவலும், சீனாவை சேர்ந்த யாங் ஜிய்ச்சியும் கலந்து கொண்ட நிலையில் இருவரும் இது குறித்து பேசியுள்ளனர்.
இந்த பேச்சுவார்ததை குறித்து குறித்து சீனா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் சீன பிரதிநிதி, டோக்லாம் சீன எல்லைக்குள் அமைந்த பகுதி எனவும்;. சர்வதேச சட்டவிதிகளின்படி சீனாவின் இறையாண்மைக்கு இந்தியா மதிப்பளிக்க வேண்டும் என்றும் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கு அத்துமீறி இந்தியாதான் நுழைந்து இருக்கிறது, எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தனது படைகளை திரும்ப பெறுவதற்கு இந்தியா உறுதியான நடவடிக்கையை உடனடியாக எடுக்கவேண்டும் எனவும் வற்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.