குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கட்டாருக்கும் இத்தாலிக்கும் இடையில் பாரிய வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது. ஐந்து கப்பல்கள் தொடர்பில் கட்டார் 5 பில்லியன் யூரோ பெறுமதியான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ கூட்டுறவு நடவடிக்கையின் ஓர் கட்டமாக இந்த கப்பல்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளன.
இத்தாலியின் வெளிவிவகார அமைச்சர் Angelino Alfano; தற்போது கட்டாருக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
இந்தநிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் இராணுவ நடவடிக்கைகள் வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐந்து பில்லியன் யூரோ பெறுமதியான கொடுக்கல் வாங்கல் என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட உள்ள நிறுவனங்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது