போர்த்துக்கல்லின் தலைநகரம் லிஸ்பனில் உள்ள கடற்கரை ஒன்றில் சனத்தொகை அதிகமுள்ள பகுதி ஒன்றில் சிறிய விமானம் ஒன்று தரை இறங்கியதன் போது ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
குடற்கரையில் மக்கள் சுடியிருந்த சமயம் வானில் பறந்து கொண்டு இருந்த குறித்த விமானம் ஒன்று கடற்கரையை நோக்கி தாழ்வாக பறந்து வந்த நிலையில் அதன் விமானியினால் மேல் நோக்கி கொண்டு செல்ல முடியாத நிலைய ஏற்பட்டதனைத் தொடர்ந்து கூட்டத்துக்கு மத்தியில் தரை இறங்க முயற்சித்ததனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தின் போது விமானத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்ற போதும் விமானம் மோதி 8 வயது குழந்தையும், 50 வயது மதிக்கத்தக்க ஆணும் உயிரிழந்துள்ளதுடன் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.