குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் 13 ஊடகவியலாளா்கள் கொல்லப்பட்டதோடு 87 போ் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டனா் என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார் .
இலங்கை பத்திரிகை பேரவையின் மாணவா்களுக்கான பட்டமளிப்பு விழாவில் விசேட விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவா் இதனை தெரிவித்துள்ளார் .
அங்கு அவா் மேலும் தெரிவிக்கையில்
கடந்த மகிந்த ராஜபக்ஸ ஆட்சியின் போது இலங்கையில் 13 ஊடகவியலாளா்கள் கொல்லப்பட்டனா். மகிந்தவுக்கு ஆதரவாக செயற்படாத 87 ஊடகவியலாளா்கள் அச்சுறுத்தப்பட்டனா். மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
2006 ஆம் ஆண்டு தமிழ் ஊடகவியலாளரான திருகோணமலையைச் சேர்ந்த சுப்பிரமணியம் சுகிர்தராஜன் படுகொலையுடன் ஆரம்பமான ஊடகவியலாளர்கள் கொலை 13போ் வரை சென்றது. எனத் தெரிவித்த அவா் தற்போது நாட்டில் உண்மையான ஊடக சுதந்திரம் நிலவுகிறது என்றும் குறிப்பிட்டாh்