170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நடத்தப்பட உள்ளது.
ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவில் இன்றைய தினம் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் ஆகியன தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது. வாக்காளர் இடாப்பு தயாரித்தல் தொடர்பிலும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பெபரல் அமைப்புடனும் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Spread the love