Home இந்தியாமீனவர் பிரச்சினை குறித்து நரேந்திர மோடி இலங்கையுடன் அடிக்கடி பேசி வருகின்றார்

மீனவர் பிரச்சினை குறித்து நரேந்திர மோடி இலங்கையுடன் அடிக்கடி பேசி வருகின்றார்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இந்திய மீனவர் பிரச்சினை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் தொடர்பில், அடிக்கடி பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தும் அநேக சந்தர்ப்பங்களில் இந்திய மீனவர் பிரச்சினை குறித்து பிரதமர் மோசடி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதன் காரணமாகவே 42 படகுகளையும் 251 மீனவர்களையும் விடுதலை செய்ய முடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More