குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் வரட்சி காரணமாக 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் 19 மாவட்டங்களில் கடுமையான வரட்சியுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது.
இதனால் சுமார் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் குடும்பங்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் துணைப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
வரட்சியினால் அதிகம் வடக்கு மாகாண மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர். வட மாகாணத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து முப்பத்து மூன்றாயிரம் குடும்பங்களைச் சேர்ந்த நான்கு லட்சத்து அறுபத்து இரண்டாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக வடமேல் மாகாணத்தில் வரட்சி காரணமாக அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.