குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
துரித கதியில் அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுதல் மற்றும் பொருளாதாரத்தைக கட்டியெழுப்புதல் ஆகியனவற்றை துரித கதியில் முன்னெடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்ற வாழ்க்கைக்கு நாற்பது ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிலையான சமாதானம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகியனவற்றை முன்னிலைப்படுது;தி அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் அரசியலில் இணைந்து கொண்ட போது ஐரோப்பாவை மையப்படுத்தியே உலகம் செயற்பட்டது எனவும் தற்போது அந்த நிலைமை ஆசியாவின் பக்கம் திரும்பியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெற்றியையும் தோல்வியையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனோ திடம் அரசியல்வாதிகளுக்கு இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.