Home இலங்கை கிளிநொச்சியில் சிகிச்சை பலனிற்றி 12 வயது சிறுமி மரணம்

கிளிநொச்சியில் சிகிச்சை பலனிற்றி 12 வயது சிறுமி மரணம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி  மாவட்ட வைத்தியசாலையில்  நேற்று சனிக்கிழமை  நண்பகல் 01 மணியளவில் நெஞ்சு நோவு, இருமலுடன் இரத்தம் மற்றும் காய்ச்சல் ஆகிய அறிகுறிகளுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 வயதுச் சிறுமி சிகிச்சை பலனின்றி இரவு 8 மணியளவில் காலமானார்.

ஸ்கந்தபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த இச்சிறுமி ஐந்து நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இச்சிறுமிக்கு பாரதூரமான நோய் எதுவும் இருப்பதாகத் தெரியவரவில்லை. இவரது இறப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனையின் பின்னரே தெரியவரலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

காய்ச்சல் முதலான அறிகுறி தென்படும் எவரும் அருகில் உள்ள அரச மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைபெறுமாறு சுகாதாரப் பிரிவினர் வேண்டிக் கொண்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More