குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நேற்று சனிக்கிழமை நண்பகல் 01 மணியளவில் நெஞ்சு நோவு, இருமலுடன் இரத்தம் மற்றும் காய்ச்சல் ஆகிய அறிகுறிகளுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 வயதுச் சிறுமி சிகிச்சை பலனின்றி இரவு 8 மணியளவில் காலமானார்.
ஸ்கந்தபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த இச்சிறுமி ஐந்து நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இச்சிறுமிக்கு பாரதூரமான நோய் எதுவும் இருப்பதாகத் தெரியவரவில்லை. இவரது இறப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனையின் பின்னரே தெரியவரலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
காய்ச்சல் முதலான அறிகுறி தென்படும் எவரும் அருகில் உள்ள அரச மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைபெறுமாறு சுகாதாரப் பிரிவினர் வேண்டிக் கொண்டுள்ளனர்.
Add Comment