குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரியா, அமெரிக்காவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பினால் பிரயோகிக்கப்பட்ட தடைகள் தொடர்பில் இவ்வாறு வடகொரியா தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை வடகொரியாவிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் இந்த நடவடிக்கையானது நாட்டின் இறைமையை மீறும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் ஏற்றுமதியை தடுக்கும் நோக்கில் இவ்வாறு வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாகக் குற்றம் சுமத்திப்பட்டுள்ளது. வடகொரியா தொடர்ச்சியாக எச்சரிக்கைகளை மீறி ஏவுகணை மற்றும் அணுவாயுத பரிசோதனை நடத்தியமைக்காக இவ்வாறு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது