குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டில் இடம்பெற்று வரும் போதைப் பொருள் வர்த்தகத்துடன் ஆளும் கட்சியின் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உண்டு என தேசிய பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
தராதரம் பார்க்காது குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தண்டிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹெரோயின், கஞ்சா, ஹாசீஸ் போன்ற போதைப் பொருட்களை பல்கலைக்கழக மாணவர்கள் பயன்படுத்தி வருவதாக ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் சன்ன ஜயசுமன, ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சதொச நிறுவனத்திற்காக கொண்டு வரப்பட்ட சீனி கொள்கலன்களில் பாரியளவில் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன. இவ்வாறு போதைப் பொருள் மீட்கப்பட்டமை குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.
அமைச்சரவை அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது நல்லாட்சி கொள்கைகளுக்கு புறம்பானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.