குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தனது மனைவிக்கு பிரான்ஸின் முதல் பெண்மணி அந்தஸ்த்தை வழங்குவதற்கு எதிர்கொண்டுள்ளார்
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் பிரான்ஸ் அரசியலில் குடும்பங்களின் ஆதிக்கத்தை ஓழிப்பேன் என தெரிவித்த ஜனாதிபதி தற்போது தனது மனைவியை உத்தியோகபூர்வ முதல் பெண்மணியாக அறிவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதன் மூலம் தான் ஓரு ஏமாற்று பேர் வழி என்பதை நிருபித்துள்ளார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மக்ரோனின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 200.000 ற்கும் அதிகமானவர்கள் மனுவொன்றில் கையெழுத்திட்டுள்ளனர். குறிப்பிட்ட மனுவில் மக்ரோனின் மனைவிக்கு அரச நிதி மேலதிக பணியாளர்கள் அரச அலுவலகம் ஆகியவற்றை ஓதுக்கதேவையில்லை எனவும் அவரிற்கு தற்போதுள்ள பணியாளர்களே போதும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பிரான்ஸின் அரசமைப்பு ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ அந்தஸ்த்து எதனையும் வழங்காதது குறிப்பிடத்தக்கது.