175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெளிவிவகார அமைச்சுப் பதவிக்கு சரத் அமுனுகம நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சுப் பதவியை வகித்து வரும் ரவி கருணாநாயக்க விரைவில் பதவி விலக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பதவி வெற்றிடத்திற்கு சரத் அமுனுகம நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பதவி ஐக்கிய தேசியக் கட்சிக்கு செல்ல வேண்டும் என்ற போதிலும், ராஜதந்திர விவகாரங்களில் அனுபவம் உள்ள அமுனுகமவை நியமிக்க பிரதமரும் இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சரத் அமுனுகமவின் தற்போதைய அமைச்சுப் பதவி திலக்க மாரபனவிற்கு வழங்கப்பட உள்ளது.
000
Spread the love