குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெனிசுலாவிற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வெனிசுலா நாட்டு அரசாங்கம் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
போராட்டங்களில் ஈடுபட்டு வருவோர் மீது அதீத அதிகாரம் பிரயோகிக்கப்படுவதாகவும் சித்திரவதைகள், வன்முறையான முறையில் வீடுகள் மீது சுற்றி வளைப்பு மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல்களில் வெனிசுலா அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
போராட்டங்களுடன் தொடர்புடைய வன்முறைகளில் குறைந்தபட்சம் 46 பேர் வரையில் உயிரிழப்பதற்கு படையினர் காரணமாகினர் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வெனிசுலாவின் மனித உரிமை நிலைமைகள் குறித்து கண்காணிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார்.