இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 49 தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
நெடுந்தீவு பகுதியில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தெரிவித்து 49 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர்.
அத்துடன் அவர்களின் 12 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் நீதிமன்றத்தில் முனன்pலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 22-ம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டள்ளனர்.
இந்நிலையிலேயே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 49 தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.