குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாரிசில் இராணுவத்தினரை காரால் மோதித்தாக்கிய நபர் துரத்திபிடித்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் அந்த நபர் மீது துப்பாக்கிபிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் அவர் காயமடைந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்
குறிப்பிட்ட நபருடன் இடம்பெற்ற துப்பாக்கிமோதலின் போது காவல்துறையை சேர்ந்த ஓருவரும் காயமடைந்துள்ளார்.
ஏ16 அதிவேகநெடுஞ்சாலையில் அந்த நபர் காவல்துறையினரிடமிருந்து தப்பமுயன்றவேளை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிபிரயோகத்தில் அவர் படுகாயமடைந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாகனத்தாக்குதலை மேற்கொண்ட நபர் 1980 ஆண்டு பிறந்தவர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாரிசில் படையினர் மீது காரால் மோதி விட்டு தப்பிச் சென்றுள்ள நபரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
Aug 9, 2017 @ 11:32
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் படையினர் மீது காரால் மோதிவிட்டு தப்பிச்சென்றுள்ள நபரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்
பிஎம்டபில்யூ காரை பயன்படுத்தி இனந்தெரியாத நபர் ஓருவர் மேற்கொண்ட தாக்குதலில் இரு படையினர் காயமடைந்துள்ளனர். பாரிசின் புறநகர் பகுதியில் உள்ள லெவலொலிஸ் பரெட் என்ற பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
காரால் மோதிய சம்பவம் வேண்டுமென்றே இடம்பெற்றதாக உள்ளுர் மேயர் ஓருவர் தெரிவித்துள்ளார்.இராணுவ முகாமொன்றிற்கு வெளியே இந்த சம்பவம் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகனமொன்று படையினர் வெளியே வருவதற்காக காத்திருந்தது -இது பிஎம்டபில்யூ ரக வாகனம், படையினர் வெளியே வந்ததும் வேகமாக வந்து அவர்களை மோதியது என மேயர் தெரிவித்துள்ளார்.