196
ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே ரிக்டர் 4.9 அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கைகள் எதும் விடப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
டோக்கியோவின் கிழக்குப்பகுதியில் உள்ள சிபாவில் இன்று அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவு கோலில் 4.9 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கைகள் எதும் விடப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் வேறு எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love