குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பணி நீக்க தாமதிக்கின்றார் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரவி கருணாநாயக்கவை பணி நீக்குவதற்கு சகல அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு உண்டு எனவும் ஜனாதிபதி உடனடியாக ரவி கருணாநாயக்கவை பணி நீக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்க ஏன் காலம் தாழ்த்தி வருகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் பல்வேறு தரப்பினர் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். பிரரதமர் ரணில் விக்ரமசிங்க சட்டவிரோதமான முறையில் மத்திய வங்கியை தனது கீழ் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.