Home இலங்கைஆவா குழுவின் மேலும் மூன்று உறுப்பினர்கள் சுண்ணாகம் காவல்துறையினரால் கைது: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

ஆவா குழுவின் மேலும் மூன்று உறுப்பினர்கள் சுண்ணாகம் காவல்துறையினரால் கைது: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

by admin

வடக்கில் வாள் வெட்டு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் ஆவா குழுவின் மேலும் மூன்று உறுப்பினர்கள் சுண்ணாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் மூவரும் நேற்றிரவு சுண்ணாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மானிப்பாயைச் சேர்ந்தவர்களான துரைசிங்கம் ராஜ்குமார் எனப்படும் அஜித்குமார், ரவிச்சந்திரன் ஸ்டாலிங்டன் எனும் எஸ்.ஆர் மற்றும் சுண்ணாகத்தினைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை பிரபாகரன் எனும் கிஸ்பா ஆகிய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.  குறித்த மூவரும் இன்றைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுப்பட ஊள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More