188
போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு எதனையும் பேணவில்லை என மெக்ஸிக்கோ தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவர் ரபேல் மார்கஸ் (Rafael Marquez) தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தாம் தொடர்பு பேணுவதாக அமெரிக்கா சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ரபேல் மார்கஸ் உள்ளிட்ட 21 நபர்களுக்கும் 41 நிறுவனங்களுக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love