174
இந்தியாவின் 13-வது துணை ஜனாதிபதியாக வெங்கைய்யா நாயுடு இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
டெல்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து புதிய துணை ஜனாதிபதியாக வெங்கைய்யா நாயுடு தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love